அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல்கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பின் அடிப்படையில் குறுகியகால புனர்வாழ்வளித்து விடுதலைசெய்ய வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்நகரில் முன்னெடுக்கப்பட்டது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை யாழ். நாவாந்துறை சந்தை பகுதியில் இடம்பெற்றது.

சகல தமிழ் அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பு வழங்குவதன் மூலமோ அல்லது குறுகிய புனர்வாழ்வு வழங்கியதன் பின்னரோ விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் விலியுறுத்தினர்.

அத்துடன் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் கைதிகளிற்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக வரும் வரவு செலவுத்திட்டத்தை பயன்படுத்துவதுடன், ஏனைய முஸ்லிம் மற்றும் பெரும்பான்மை இன நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் தமிழர் தரப்பிற்கு ஆதரவு வழங்கவேண்டும் எனவும் இவர்கள் வலியுறுத்தினர்.

யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !