அரசியல் கைதிகளின் விடுதலை குறித்துக் கலந்துரையாடுவோம் – பிரதமர் ரணில்

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்துக் கலந்துரையாடுவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பிரதமரிடம் கேள்வி எழுப்பும் நேரத்தில் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே, பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2001, 2002ஆம் ஆண்டுகளில், அப்போதைய அரசாங்கத்தாலும் பிரபாகரனாலும் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது. அப்போது நீங்கள் பிரதமராக இருந்தீர்கள். அன்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் இருந்தது. ஆனால், இன்று பிரபாகரன் இல்லை. இருப்பினும், அச்சட்டம் இன்னும் அமுலில் உள்ளது. இதனால், அரசியல் கைதிகள் 107 பேர் இன்று வரையில் சிறையில் உள்ளனர்.

எனவே இவர்களது விடுதலை குறித்து ஜனாதிபதி, பிரதமர், நீதியமைச்சர், சட்ட மா அதிபர் ஆகியோர், ஒரே மேசையில் அமர்ந்து கட்சி பேதமின்றி கலந்துரையாடலை மேற்கொள்ள முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் கேள்வி எழுப்பியிருந்தார்

மேலும் 2001 மற்றும் 2202 ஆம் ஆண்டுகளில் பாரதுரமான குற்றமிழைக்காத சிலரும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிலரும், விடுதலை செய்யப்பட்டனர். எனினும் மனிதப் படுகொலை உள்ளிட்ட பாரிய குற்றங்களை இழைத்த பலர், சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சாராதவர்கள் எனத் தெரிவித்துள்ளனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் சுட்டிக்காட்டியிருந்தார். இதற்குப் பதிலளித்த போதே பிரதமர் எவ்வாறாயினும், கைதிகளின் விடுதலை குறித்துக் கலந்துரையாடுவோமெனத் தெரிவித்துள்ளார்« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !