அரசியல் இலாபம் தேடுவதில் மு.க.ஸ்டாலின் குழம்பியுள்ளார்: ஓ.பன்னீர் செல்வம்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் இலாபம் பெறுவதில் குழம்பி போயுள்ளதாக தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“எந்தபக்கம் தாவினால் அரசியல் இலாபம் ஈட்டலாம் என்பதில் மு.க.ஸ்டாலின் குழம்பி போயுள்ளார்.

அந்தவகையில் அண்மையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை தமிழகத்துக்கு அழைத்து வந்து அவரை பிரதமராக அறிவித்தார்.

அதேபொன்று இன்று அவர்களுடன் கூட்டணியில் இணைந்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட ஏனைய கட்சி தலைவர்கள் 28 பேர் உள்ளடங்களாக கலகத்தாவில் பாரிய கூட்டமொன்றை நடத்தியிருந்தனர். அக்கூட்டத்திலும் ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார்.

இவ்வாறு ஸ்டாலின் செயற்படுவதனை பார்க்கும்போது, அரசியல் இலாபத்தை பெற்றுகொள்வதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார் என்பது உறுதியாகின்றது” என  ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !