அரசியல்வாதிகள் சிங்களத்தையும் பெளத்தத்தையும் தூக்கிப் பிடிக்கிறார்கள்: மனோ

இலங்கையின் சிங்கள அரசியல்வாதிகள் நாட்டைவிட சிங்களத்தையும், பெளத்தத்தையும் தூக்கிப் பிடிக்கிறார்கள் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் சிங்கள அரசியல் தலைவர்களின் இந்த செயற்பாடு காரணமாகவே இலங்கை தேசியம் தோற்றுப்போயுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“ஹிந்தி இல்லாமல் இந்தியா முன்னேறாது” என இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறிய கருத்து தொடர்பில் விளக்கமளித்து டுவிட்டரில் அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அந்தவகையில் இந்தியர்கள் ஹிந்தியையும், ஹிந்துவையும் தூக்கிப் பிடிக்கிறார்கள். அதேபோல சிங்கள அரசியல்வாதிகள் நாட்டைவிட சிங்களத்தையும், பெளத்தத்தையும் தூக்கிப்பிடிக்கிறார்கள் என மனோ மேலும் கூறியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !