அரசியலுக்கு வந்தால் சோதனைகளை தாங்க முடியாது: ரஜினிகாந்துக்கு ஓ.பி.எஸ். அணி பதிலடி

அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி பொதுச்செயலாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:-

அ.தி.மு.க.வை தொண்டர்கள் இயக்கமாக மீட்டு எடுப்போம். அதற்காக தொடர்ந்து பாடுபடுவோம். கோட்பாட்டில் இருந்து ஒருபோதும் நாங்கள் விலக வில்லை.

சசிகலா குடும்பத்தை வெளியேற்றினால்தான் இணைப்பு பேச்சுவார்த்தை தொடங்கும். ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் அறிவித்தப்பின் ஆதரவு பற்றி முடிவு செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கே.பி.முனுசாமி கூறியதாவது:-

இன்று ரஜினிகாந்த் தமிழக அரசியல் பற்றி பேசி இருக்கிறார். ஒரு வார்த்தை பேசியதற்கே அவரால் தாங்க முடியவில்லை. அவர் அரசியலுக்கு வந்து பார்க்கட்டும். இங்கு எவ்வளவு சோதனைகள் ஏச்சுகள், பேச்சுகள் எப்படி இருக்கும் என்பதை அவர் வந்து பார்க்கட்டும்.

நடிப்பு தொழிலில் இருந்து அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதை அவர் உணர்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரஜினிகாந்த் இன்று பேட்டியளித்தபோது அரசியல் கெட்டு போனதாக அ.தி.மு.க.வை மறைமுகமாக தாக்கினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கே.பி.முனுசாமி பதிலளித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !