அரசியலமைப்பை நிராகரிப்பது பாரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும்: மனோ

அரசியலமைப்பு நிராகரிக்கப்படின் அது புலம்பெயர் தமிழர்களுக்கு தவறானதொரு செய்தியை கொண்டு செல்வதுடன், அதனால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமாக அமையும் என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) கூடிய அரசியலமைப்பு சபையில் புதிய அரசியலமைப்பு குறித்த யோசனையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அரசியலமைப்பு உருவாக்கத்தில் தற்போது சர்வ கட்சிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கோரும் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான விடயங்களும் நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதனை நிராகரித்தால் புலிகளை மீள உருவாக்குங்கள். இங்கே பிரச்சினை உண்டு. மீண்டும் யுத்தத்தை ஆரம்பியுங்கள் என்ற செய்தி புலம்பெயர் தமிழர்களுக்கு செல்லும். அதுவா உங்களுக்கு தேவை?

இனவாதம் மதவாதம் பிரிவினைவாதம் போன்ற காரணங்களால் எமது நாடு முன்னேற்றமின்றி காணப்படுகிறது. தேர்தல் உரிமை பெற்ற ஒரு நாடு இன்று பின்னடைந்து செல்கிறது. இந்நாட்டில் ஒரு சமூகத்திற்கு மாத்திரமே உரிமை உண்டு என்றால் அதுதான் பிரிவினைவாதம்” எனத் தெரிவித்தார்.« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !