அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகளுக்கு மஹிந்த ஒத்துழைக்க வேண்டும் – சுமந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றத் தயார் எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர், புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகளுக்கும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “புதிய அரசியலமைப்பு குறித்த வரைபில் மாகாணங்களுக்கான நிரல் மற்றும் மத்திக்கான நிரல் இதுவரையில் தயாரிக்கப்படவில்லை. அதிலுள்ள விடயங்கள் குறித்து இதுவரையில் எழுதப்படவில்லை.

இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் அதற்கான நிரல்கள் முன்மொழியப்பட்டன. அந்த முன்மொழிவுகளை இந்த புதிய அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாரகவிருக்கின்றோம்“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !