அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா
அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் எவரும் கூறவில்லை என அக்கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் மறைந்த பொதுச் செயலாளர் தர்மசிறி சேனாநாயக்கவின் 21 வது நினைவு தினம் இன்று கொழும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வாங்கும்போதே அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா மேற்கண்டவாறு கூறினார்.
“தங்களை யாரும் வெளியேறச் சொல்லவில்லை. தலைவர் இன்று இங்கே இல்லை, அவர் அவசர விடயத்திற்காக பொலன்னறுவைக்கு சென்றுள்ளார்” என நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்தார்.