அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை

வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து,தங்களது விடுதலைக்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு–மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சந்தித்திருந்தார்.
இதன்போது அவர்கள் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளனர்.
அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களது போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், மகசின் சிறையிலும், கண்டி சிறையிலும் உள்ள அரசியல் கைதிகள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சந்தித்த போது, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது விடுதலையை முக்கிய நிபந்தனையாக முன்வைக்க வேண்டும் என்று அவரிடம் கோரியுள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !