Main Menu

அரசாங்கத்தின் மீது குற்றம் இல்லை என்றால் சர்வதேச நீதிமன்றம் செல்லப் பயப்படுவது ஏன்? – மணிவண்ணன்

இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றம் இல்லை என்றால், எவரும் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லையென்றால் சர்வதேச நீதிமன்றத்தின் முன் தோன்றுவதற்கு ஏன் பயப்படுகின்றீர்கள் என அரசாங்கத்திடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் படையினரை சர்வேதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துங்கள் எனவும் அதன் பின்னர்தான் யார் கடத்தலில் ஈடுபட்டார்கள், யார் காணாமல் செய்யப்பட்டார்கள், எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டார்கள் மற்றும் இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன எனும் அனைத்து மர்மங்களும் வெளியில் வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் மாத்திரமின்றி கிழக்கு மாகாணத்திலும் பாரிய மாற்றமொன்றை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.