Main Menu

அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்

கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான விவாதம் தற்போது இடம்பெற்று வருகிறது.
நாடாளுமன்ற ஆரம்பத்தின் போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்ட மொஹமட் சாலி நளீம் நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் கலாநிதி அசோக சபுமல் ரன்வல முன்னிலையில் அவர் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 87,038 வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும் தேசிய பட்டியல் ஆசனம் ஒன்றையும் பெற்றுக்கொண்டது.
இதேவேளை நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கான அங்கத்தவர்கள் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் அங்கத்தவர்களின் பெயர்களை சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக்க சபையில் அறிவித்தார்.
இதன்படி, இந்த குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிமல் ரத்னாயக்க, நளின் த ஜயதிஸ்ஸ, இராமலிங்கம் சந்திரசேகரன், கே.வீ.சமந்த வித்யராத்ன, அநுர கருணாதிலக்க, சரோஜா சாவித்திரி போல்ராஜ், எரங்க குணசேகர, முனீர் முலாபர், கயந்த கருணாதிலக்க, ரவூப் ஹக்கீம், ரவீ கருணாநாயக்க, பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
பகிரவும்...
0Shares