அயோத்தி வழக்கில் நாளைய விசாரணை திடீர் இரத்து – உச்சநீதிமன்றம்

அயோத்தி விவகாரம் தொடர்பான மேன்முறையீட்டு மனுக்கள் மீதான நாளை நடைபெறவிருந்த விசாரணை இரத்து செய்யப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் அரசியல்சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள ஒரு நீதிபதி இல்லாத காரணத்தால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்ற பதிவாளர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி எஸ்.ஏ.போப்டே செவ்வாய்க்கிழமை வர இயலாத சூழல் உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, அன்றைய தினம் நடைபெறவிருந்த விசாரணையை, அரசியல் சாசன அமர்வு இரத்து செய்துள்ளது. அன்றைய தினம் விசாரணை நடைபெறாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த அறிக்கையில் விசாரணைக்கான புதிய திகதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !