அம்மாவுக்கு மகளுக்கும் ஒரே வினாடியில் பிரசவம்: உலகின் முதல் அதிசயம்

அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிரசவம் என்பது அவ்வப்போது நிகழும் அதிசயம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரே நாளில் ஒரே நேரத்தில் இன்னும் சரியாக சொல்ல போனால் ஒரே நொடியில் அம்மாவுக்கும், மகளுக்கும் பிரசவம் ஆன அதிசய சம்பவம் சிரியாவில் நடந்துள்ளது.

மத்திய துர்கியின், கோனியாவைச் சேர்ந்தவர்கள் பாதிமா பீரீன்ஜி என்ற 42 வயது பெண்ணுக்கும் அவரது மகள் காதா பீரீன்ஜி என்ற 22 வயது பெண்ணுக்கும் நேற்று ஒரே நாளில், ஒரே நிமிடத்தில், ஒரே நொடியில் ஆளுக்கொரு ஆண் குழந்தைகளை பெற்றுள்ளனர்.

இப்படி ஒரு அதிசயம் உலகத்தில் நடப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் துர்க்கியின் தலைவர் ரஜப் தையிப் அர்துகான் மீதுள்ள அளவற்ற அன்பு காரணமாக, தாயின் பிள்ளைக்கு ரஜப் என்றும், மகளின் குழந்தைக்கு தையிப் என்றும் பெயர்களைச் சூட்டியுள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !