அம்புகளால் துளைக்கப்பட்டு இறந்து காணப்பட்ட மூவர்!
ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் அம்புகளால் துளைக்கப்பட்டு மூவர் இறந்து கிடக்கக் காணப்பட்டனர்.
மூவரும் ஜெர்மானியர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் இருவர் பெண்கள். ஒருவர் ஆண். அவர்கள் மூவரும் இணைந்து அந்த ஹோட்டல் அறையை வெள்ளிக்கிழமை முன்பதிவு செய்திருக்கின்றனர்.
ஆஸ்திரிய எல்லைப் பகுதிக்கு அருகே, பஸ்ஸாவ் எனும் நகரின் நதிக்கரையோர ஹோட்டலில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பிருப்பதாய்த் தெரியவில்லை என்று காவல்துறை தெரிவித்தது.
விசாரணை தொடர்கிறது.