அம்பாறையில் நாட்டுக்காக ஒன்றிணைவோம் – பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் மக்கள் பங்கேற்பு
நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்திற்கான வேலைத்திட்டம் 20 பிரதேச செயலாளர்கள் பிரிவின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டது.
இன்றைய தினம் தொழில் வழிகாட்டல் செயலமர்வு மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அறிவுறுத்தும் வேலைத்திட்டங்கள் பல இடம்பெற்றன. தமன பிரதேச செயலாளர் பிரிவில் விவசாயம் தொடர்பில் இளைஞர்கள் முகங்கொடுக்கும் சவால்கள் தொடர்பான கருத்தரங்கு இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் பெருந்தோட்டத்துறை அமைச்சு மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் வேலைத்திட்டங்கள் பல இடம்பெற்றன. நாட்டிற்காக ஒன்றிணைவோம், அம்பாறை மாவட்டத்திற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் சனிக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.
நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்காக அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு முஸ்லிம் மக்களின் உயர்வான பங்களிப்பு காணப்பட்டது.
அத்தோடு இந்த வேலைத்திட்டத்திற்கு பெரும் எண்ணிக்கையில் முஸ்லிம் மக்கள் வாழும் சாய்ந்தமருது, கல்முனை(முஸ்லிம்) , அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் பெரும்பாலான மக்கள் கலந்துக் கொண்டதாக அம்பாறை மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய சுற்றாடல் வேலைத்திட்;டத்தின் கீழ் சுற்றாடல் பாதுகாப்பில் கரையோர பகுதிகளில் உள்ள கழிவுப் பொருட்களை அகற்றும் வேலைத்திட்டம் (நேற்று) காலை 6.30 க்கு சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேச செயலக பிரிவுகளில் ஆரம்பமானது.
இந்த பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் மக்கள் பெருமளவில் கலந்துக் கொண்டதாக இந்த பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த மத வழிபாடுகளுக்கு தடை ஏற்படாத வகையில் இவர்கள் காலை 6.30க்கு இந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் கலந்துக் கொண்டதுடன் பிரதேசத்தில் நடைபெற்ற சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்களிலும் விஷேட பங்களிப்பை வழங்கினர்.
கடந்த சில தினங்களில் நாட்டில் இடம்பெற்ற வேண்டத்தகாத சம்பவத்துக்கு மத்தியிலும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து இன மக்களும் எந்த வித வேறுபாடும் இன்றி அமைதியான முறையில் தமது நாளாந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் இந்த வாரம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விளக்கமளித்தல் மற்றும் ஏனைய சமூக அபிவிருத்தி திட்டங்களில் கலந்துக் கொண்டு ஏனைய மாவட்ட மக்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாக அம்பாறை மாவட்ட செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்தார்.
நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் மே மாதம் 6 ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன் கீழ் இந்த மாவட்டத்தில் சுமார் 5000 அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் இன்றைய தினம் (06) மாத்திரம் சுமார் 600 திட்டங்கள் தெஹிஅத்த கண்டிய, பதியதலாவ, மாவோய, உஹன, அம்பாறை, தமன, லாஹ10கல, பொத்துவில், திருக்கோவில், ஆலயடிவேம்பு, அக்கறைபற்று, அட்டாளைச்சேனை, எரகம, நிந்தவூர், சாய்ந்தமருது, காரைத்தீவு கல்முனை, நாவிந்தன்வேலி, சம்மாந்துறை, ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக அம்பாறை மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது,