அமைதியை ஏற்படுத்துவது போரைவிட சிக்கலாக உள்ளது

வெளிநாட்டுப் படைகள் வெளியேறும் வரை அமைதி ஒப்பந்தத்தில் உடன்பாடில்லை என தலிபான்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.  ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா தொடர்ந்து தலிபான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் கடந்த சில மாதங்களாக அமெரிக்காவின் சிறப்பு தூதுவரான ஜல்மாய் கலில்ஜாத்துடன் தலிபான் அரசியல் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் தலைமையில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேற வேண்டும் எனவும் அதுவரை தலிபான்களுக்கு அமைதி ஒப்பந்தத்தில் உடன்பாடில்லை என ஷேர் முகமது அப்பாஸ் நேர்காணல் ஒன்றின் போது தெரிவித்துள்ளார்.

அமைதியை ஏற்படுத்துவது போரைவிட சிக்கலாக இருக்கிறது எனத் தெரிவித்த அவர் இறுதியாக இதற்குத் தீர்வு எட்டப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அரச படைகளுக்கும் தலிபான்களுக்குமிடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்ற நிலையில் அரச படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படை தலிபான்களுடன் போரிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !