அமெரிக்க- வடகொரிய ஜனாதிபதிகளின் தைரியம் பாராட்டத்தக்கது: தென்கொரியா

அமெரிக்க- வடகொரிய ஜனாதிபதிகளின் தைரியத்தையும், துணிவுமிக்க தீர்மானங்களையும், தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் பாராட்டியுள்ளதாக, ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

தென்கொரிய ஜனாதிபதியின் அறிவிப்பு குறித்து, இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி இல்லத்தின் பேச்சாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொரிய தீபகற்பத்தை அணுவாயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கு இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்காவும், வடகொரியாவும் இன்று உறுதியளித்தது. அதன்படி, அதன் பழைய எதிரிக்கு பாதுகாப்பு உதரவாதங்களை வழங்குவதற்கு வொஷிங்டன் உறுதியளித்தது.

பல போராட்டங்களுக்கு மத்தியில் ட்ரம்ப்-கிம் வரலாற்று சந்திப்பு இன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் அணுவாயுத பயன்பாட்டை நிறுத்துவதை இலக்காக கொண்ட முக்கிய ஆவணமொன்றில் ட்ரம்பும், கிம்மும் கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !