அமெரிக்க நீதிமன்றில் கோத்தபாயவிற்கு மேலும் 60 நாள் அவகாசம்!
பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சாவினால் அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பதிலளிக்க மேலதிக காலஅவகாசத்தை கோரியுள்ளார் கோத்தபாய ராஜபக்ச.
லசந்த விக்கிரமதுங்க கடத்திக் கொல்லப்பட்ட சமயத்தில் பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபாய ராஜபக்ச, இந்த கொலைக்கு பதிலளிக்க வேண்டுமென குறிப்பிட்டு அஹிம்சா சிவில் வழக்கொன்றை மத்திய கலிபோர்னிய மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக கோத்தபாய ராஜபக்சவின் பதிலை ஏப்ரல் 29ம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் வரும் ஜூன் 27ம் திகதி வரை அந்த அவகாசத்தை நீடிக்குமாறு கோத்தபாய தரப்பு சட்டத்தரணிகள் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.