Main Menu

அமெரிக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவிவிலகியுள்ளார்.

அமெரிக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அலெக்ஸ் அகோஸ்டா திடீரென பதவிவிலகியுள்ளார். 50 வயதான அலெக்ஸ் அகோஸ்டா மத்திய அரசின் சட்டத்தரணியாக இருந்து அரசியலுக்கு வந்தவராவார். அங்குள்ள 66 வயதான ஜெப்ரி எப்ஸ்டீன் என்னும் பெரும் கோடீஸ்வரர் 2008ஆம் ஆண்டு சிறுமிகளை கடத்தி வன்புணர்வுக்குட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 45 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரலாம்’ எனும் நிலை காணப்பட்ட போது அப்போது அர ச சட்டத்தரணாக இருந்த அலெக்ஸ் அகோஸ்டா, ஜெப்ரியுடன் ரகசிய பேரம் நடத்தி தண்டனை குறைப்புக்கு வழி செய்தார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரம் வெளிவந்ததனைத் தொடர்ந்து அலெக்ஸ் அகோஸ்டா அமைச்சுப் பதவியை விட்டு விலக வேண்டும் என நிர்ப்பந்தம் வந்ததனைத்  தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் ஜனாதிபதி டிரம்பை நேரில் சந்தித்து தனது பதவிவிலகல் கடித்தினை கையளித்துள்ளார்.