அமெரிக்க ஓபன் டென்னிஸ் – இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ரபேல் நடால் (ஸ்பெயின்) மூன்றாம் நிலை வீரரும், 2009-ம் ஆண்டு சாம்பியனுமான டெல்போட்ரோவை எதிர்கொண்டார். இப்போட்டியின் போது நடாலின் வலது காலில் தசைபிடிப்பு ஏற்பட்டதால் பாதியில் விலகினார். எனவே, டெல்போட்ரோ வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொருஅரையிறுதி ஆட்டத்தில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரி பலப்பரீட்சை நடத்தினர். இதில், ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
அமெரிக்க ஓபனில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் டெல் போட்ரோவை எதிர்கொள்ள உள்ளார். இப்போட்டியில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றால், அமெரிக்காவின் பீட் சாம்ராசின் சாதனையை (14 கிராண்ட் ஸ்லாம்) சமன் செய்வார்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !