அமெரிக்காவை பாதுகாப்பதற்கு எல்லை சுவர் மிக முக்கியமானது – ட்ரம்ப் வலியுறுத்தல்!

அமெரிக்காவை பாதுகாப்பதற்கு மெக்ஸிகோ எல்லை சுவர் அமைக்கப்படுவது மிக முக்கியமானது என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

டெக்ஸாஸ் மாநிலத்தின் ரியோ கிரேண்ட் பகுதிக்கு விஜயம் செய்திருந்த அவர் அமெரிக்க எல்லை தொடர்பாக ஆராய்ந்த பின்னர் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார்.

அமெரிக்க – மெக்சிகோ எல்லைச் சுவர் பிரச்சினையில் வாக்குவாதம் ஏற்படவே எதிர்க்கட்சி கூட்டத்தில் இருந்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று வெளியேறியிருந்தார்.  இந்த நிலையில், அமெரிக்காவை பாதுகாப்பதற்கு எல்லை சுவர் அமைப்பதன் அவசியதை அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “நான் மெக்ஸிகோவில் இருந்து வரும் அகதிகள் தொடர்பில் மாத்திரம் பேசவில்லை, மாறாக உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் பேசுகின்றேன்.

மெக்சிக்கோ எல்லை ஒரு பலவீனமான இடமாக இருப்பதால், அவர்கள் இலகுவாக நுழைகின்றனர். எனவே சட்டங்கள் வலுவாக இருக்க வேண்டும், உரிய பாதுகாப்பு தேவை, எனவே இதனை கட்டுப்படுத்த ஒரு தடை அவசியம் தேவை” என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, நேற்றைய கூட்டம், நேரத்தை வீணடிக்கும் செயல் எனவும், டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் குறித்த சந்திப்பில் பங்கேற்;ற எதிர்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற மேல்சபை தலைவர் நேன்சி பெலோசி டிரம்ப் ஆவேசமாக பேசியதாக குற்றம் சுமத்தியுள்ளார்.  அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்பதால் மிகுந்த ஆத்திரத்துடன் வெளியேறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !