Main Menu

அமெரிக்காவைத் தொடர்ந்து பிரான்சிலும் பரவியது கொரோனோ

அமெரிக்காவைத் தொடர்ந்து பிரான்சிலும் கொரோனோ வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவதுள்ளது.

சீனாவில் தனது தாக்குதலைத் தொடங்கிய கெரோனா வைரஸ் வியட்நாம், தாய்லாந்து என பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இந்நிலையில் சீனாவில் இருந்து அமெரிக்கா சென்றவர்களில் ஒருவருக்கு கொரோனா தாக்கம் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து குறிப்பிட்ட நபர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சீனாவின் வூகான் நகரில் இருந்து அமெரிக்கா திரும்பிய பெண் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அமெரிக்காவின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் 2 ஆயிரம் பேருக்கு வெப்ப உணரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் வந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.