Main Menu

அமெரிக்காவில் COVID-19 பாதிப்பு 11.5 மில்லியனை எட்டுகின்றன, இறப்புகள் 400,000 – உலக சுகாதார ஸ்தாபனம்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் கிட்டத்தட்ட 11.5 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

அத்தோடு மேலும் 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துவிட்டனர் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது.

உலக மக்கள் தொகையில் 13% ஆக இருந்தபோதிலும் அதிகாரப்பூர்வமாக உலகளாவிய இறப்புகளின் வீதம் 64% பதிவாகியுள்ள நிலையில், இப்பகுதி நோயின் அதிக சுமையை சுமந்து செல்கிறது என உலக சுகாதார நிறுவனத்தின் பிராந்திய இயக்குனர் கரிசா எட்டியென் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலேயே அதிகளவிலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.