அமெரிக்காவில் 6 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பேக்கர்ஸ் பீல்டு என்ற இடம் உள்ளது.

இந்த ஊரை சேர்ந்த கணவன்- மனைவி வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தனர்.

ஒருவரிடம் வாகனம் விற்பது சம்பந்தமாக பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த ஆண் திடீரென எதிரே இருந்த 2 பேரை சுட்டு கொன்றார். பின்னர் தனது மனைவியையும் கொன்றார்.

பிறகு அருகில் உள்ள மற்றொரு வீட்டுக்குள் சென்ற அவர் அங்கிருந்த 2 பேரை சுட்டு கொன்றார்.

அப்போது அங்கே ஒரு கார் வந்தது. அதில் ஒரு பெண்ணும், குழந்தையும் இருந்தனர். அந்த காரை அவர் கடத்தி சென்றார்.

சிறிது தூரம் சென்றதும் ரோட்டில் வந்த ஒருவரை சுட்டு கொன்றார். பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்தார். இதோடு அந்த நபருடன் சேர்த்து 6 பேர் உயிர் இழந்தனர்.

இந்த சம்பவம் ஏன் நடந்தது? ஏன் அவர் இத்தனை பேரை சுட்டு கொன்றார் என்று தெரியவில்லை. போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகிறார்கள்.

6 பேர் கொலையும் சில வினாடிகளில் நடந்தது குறிப்பிடத்தக்கது.(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !