அமெரிக்காவில் வாகனங்கள் மோதி விபத்து: 5 குழந்தைகள் உள்பட 7 பேர் தீயில் கருகி உயிரிழப்பு

அந்த வேன் கென்ஸ் வில்லே என்ற இடத்தில் சென்றபோது அதிவேகமாக வந்த இரண்டு லாரிகள் பயங்கரமாக மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் அவை குழந்தைகள் சென்ற வேனில் மோதின. இதனால் நொறுங்கிய வேன் ரோட்டில் கவிழ்ந்தது. அதன்மீது மேலும் 2 வாகனங்கள் மோதின. இதனால் வேன் தீப்பிடித்து எரிந்தது.

அதில் வேனில் இருந்த 5 குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர். அவர்கள் 9 முதல் 14 வயதினர் ஆவர். மேலும் 8 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இதற்கிடையே வேன் மீது மோதிய லாரிகளின் டிரைவர்கள் 2 பேரும் பலியாகினர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !