அமெரிக்காவில் பூனைகளை கொடுமைப்படுத்தி கொன்றவருக்கு 16 ஆண்டுகள் சிறை!

அமெரிக்காவின் ஜான் ஜோஸ் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் பார்மர் (26). இவர் அப்பகுதியில் வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகளை திருடினார்.

அவற்றை அடைத்து வைத்து அடித்து கொடுமைப்படுத்தினார். முடிவில் ஈவு இரக்கமின்றி கொடூரமாக கொன்றார். இது போன்று 18 பூனைகளை கொன்று இருக்கிறார். கடந்த 2015-ம் ஆண்டு இச்சம்பவம் நடந்தது.

எனவே கைது செய்யப்பட்ட இவர் மீது சான்ஜோஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி ராபர்ட் பார்மருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !