அமெரிக்காவில் பாடசாலைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு!
அமெரிக்காவில் கொலராடோ பிராந்தியத்தில் பாடசாலை ஒன்றுக்குள் நுழைந்து இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.