அமெரிக்காவில் பனிப்பொழிவு: வட கரோலினாவில் மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் வீசிய சக்திவாய்ந்த பனிப் புயல் மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக இதுவரை மூவர் உயிரிழந்ததுடன், நூறாயிரக்கணக்கானோர் இருளில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில், வட கரோலினா மாநிலத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

காரொன்றின் மீது மரம் முறிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஆறொன்றினுள் இருந்து கண்டெடுக்கப்பட்ட காரின் சாரதியை தேடும் நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

அத்துடன், வட கரோலினா ஏரிகளில் அமைக்கப்பட்டிருந்த பல படகு வீடுகளும் பனிப்புயலின் எதிரொலியாக இடிந்து விழுந்துள்ளன.

இதேவேளை, அமெரிக்காவின் தென்கிழக்கு பிராந்தியங்கள் ஊடான ஆயிரக்கணக்கான விமான போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன் காரணமாக தென்கிழக்கு பிராந்தியங்களான கரோலினா, ஜோர்ஜியா, அலபாமா, டென்னிஸி மற்றும் வேர்ஜினியா ஆகிய மாநிலங்களில் மின் இணைப்புகள துண்டிக்கப்பட்டுள்ளதால், சுமார் 3 இலட்சத்து 80 ஆயிரம் பேர்வரை இதனால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !