அமெரிக்காவில் பனிப்புயல்: ஆயிரக்கணக்கானோர் சிரமம்

அமெரிக்காவின் மிட்வெஸ்ட் (Midwest) பகுதியில் வீசிய பனிப்புயலைத் தொடர்ந்து, மின்விநியோகம் தடைப்பட்டதால், ஆயிரக்கணக்கானோர் சிரமத்தை எதிர்நோக்கியதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிட்வெஸ்ட் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடுமையான பனிப்புயல் வீசியதுடன், அப்பகுதியில் 46 சென்ரிமீற்றர்வரை பனிப்பொழிவு காணப்பட்டதாகவும், அந்நாட்டு தேசிய வானிலை நிலையம் கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து,   சுமார் 3 லட்சத்து 25 ஆயிரம் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் மின்விநியோகம் தடைப்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் சிரமத்தை எதிர்நோக்கியதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அத்துடன், பனிப்புயலைத் தொடர்ந்து மிட்வெஸ்ட்டின் மினசோடா (Minnesota) பகுதியில் சீரற்ற காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !