அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியான இந்தியர்- துப்பு கொடுத்தால் 10 லட்சம் டாலர் பரிசு

அமெரிக்காவில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ல் பிரபலமான உணவு விடுதியின் சமையல் அறைக்குள் வைத்து தனது மனைவியை இந்தியர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அமெரிக்காவில் மேரிலேண்ட் மாநிலத்தின் அருண்டேல் மில்ஸ் போல்வார்ட் பகுதியில் ‘டங்கின் டோனட்ஸ்’ என்ற பிரபலமான உணவு விடுதி ஒன்றில் பணியாற்றி வந்த 26 வயதான பத்ரேஷ்குமார் சேட்டன்பாய் படேல் என்ற இளைஞர் தனது மனைவியான பாலக் பத்ரேஷ்குமார் படேலை கொலை செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளார்.

 இந்த சம்பவத்தையடுத்து தலைமறைவாகியுள்ள பத்ரேஷ் குமாரை கடந்த 2 வருடங்களாக தேடி வந்தனர். இந்நிலையில், பத்ரேஷ்குமார் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், பத்ரேஷ் குமாரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்க போலீசார் அறிவித்துள்ளனர். மேலும் அவரை கைது செய்ய உதவினால் 10 லட்சம் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 64 லட்சங்களை) பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !