அமெரிக்காவில் தீ விபத்து: இந்திய சிறுவர்கள் 3 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏற்பட்ட தீ விபத்தின் போது இந்தியாவைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் தீ விபத்து: இந்திய சிறுவர்கள் 3 பேர் உயிரிழப்பு தெலுங்கானா சிறுவர்கள்

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மின் அலங்காரம் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 3 சகோதர, சகோதரிகள் உயிரிழந்தனர்.

தெலங்கானாவைச் சேர்ந்த சீனிவாஸ், சுஜாதா தம்பதியின் குழந்தைகள் ஷெரோன், ஜாக், ஆரோன் ஆகியோர் அமெரிக்காவில் பிரெஞ்ச் கேம்ப் அகாடமியில் படித்து வந்தனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

சீனிவாஸ், சுஜாதாவின் குழந்தைகள் ஷெரோன், ஜாக், ஆரோன்

அப்போது கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கடந்த 24-ம் தேதி அந்த வீட்டை அலங்கரிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் மரம் மற்றும் சிறிய மின்விளக்குகளை அமைத்து கொண்டிருந்தனர். அதில் தெலுங்கானாவை சேர்ந்த சகோதர சகோதரிகளும் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது திடிரென ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

தீயினால் கருகி எலும்புகூடுபோல காட்சியளிக்கும் வீடு

மேலும் அந்த வீட்டின் உரிமையாளரான அமெரிக்கப்பெண் காரி கோட்ரியெட்டும் இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளார். காரி கோட்ரியெட்டின் கணவர் டானி மற்றும் அவரது மகன் கோலே ஆகியோர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !