அமெரிக்காவின் சிகாகோ துப்பாக்கிச்சூடு: 13 பேர் காயம்!
அமெரிக்காவின் சிகாகோ நகரிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 காயமடைந்துள்ளனர்.
அந்நாட்டு நேரப்படி இன்று (திங்கட்கிழமை) விருந்துபசார நிகழ்வின்போது இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற நிலையில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு அங்கு ஏற்பட்ட முரண்பாட்டினால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து பொலிஸார் ரிவல்வர் ஒன்றை மீட்டெடுத்துள்ளனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 16 முதல் 48 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளதுடன், இச்சம்பவத்தில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது குறித்த விசாரணையை சிகாகோ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.