அமெரிக்காவின் சதி வலையில் நல்லாட்சி ஆட்சியாளர்கள்! – தமரா குணநாயகம்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப், நாட்டின் இளவரசரைப் போன்று செயற்பட்டு வருகின்றார் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா உலகின் பல நாடுகளை பிளவடையச் செய்து வருவதாகவும் அந்த வரிசையில் இலங்கையிலும் அவ்வாறான ஓர் செயற்பாட்டை மேற்கொள்ள முயற்சிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார். இந்த சதி வலையில் நல்லாட்சி ஆட்சியாளர்கள் சிக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்க வேண்டாம் என அமெரிக்கத்தூதுவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உத்தரவிட்டதாகவும், அதனை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு ஆட்சியாளர்கள் பலவீனமடைந்துள்ளதாகவும் தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !