அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு அஞ்ச மாட்டோம் – வெனிசுலா ஜனாதிபதி
தமது நாட்டில் உள்ள செல்வ வளங்களை அபகரிக்கும் நோக்கிலேயே, அமெரிக்கா போர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ குற்றம் சுமத்தியுள்ளார்.
தமது நாட்டில் உள்ள தங்கம், வைரம், பெற்றோல் உள்ளிட்ட செல்வ வளங்களை அபகரித்துக் கொள்வதற்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அமெரிக்காவின் இந்த எச்சரிக்கைகளுக்கு தமது நாடு ஒருபோதும் அஞ்சாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக உலகநாட்டுத் தலைவர்கள் முன்வர வேண்டும் எனவும் மடுரோ வலியுறுத்தியுள்ளார்.
வெனிசூலாவின் ஜனாதிபதியாக பதவி வகித்த நிகோலஸ் மடுரோ கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றும் மீண்டும் ஜனாதிபதியானார்.
எனினும் இந்த வெற்றியை ஏற்றுக் கொள்ளாத எதிர்கட்சி, நாடாளுமன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இதனிடையே, எதிர்கட்சித் தலைவர் குவைடோ தம்மையே ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்டதையும் அமெரிக்கா ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.