அமெரிக்கர் அல்லாத குழந்தைகளுக்கு குடியுரிமை இரத்து – டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த குடியுரிமை இரத்து செய்யப்படவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு வருகின்ற சட்டமூலத்தை நீக்க உள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் குடியுரிமை பெறுவதற்கான சட்டம் 14–வது அரசியல் சட்ட திருத்தம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அமெரிக்கர் அல்லாதவர்கள் மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், குடியுரிமை பெறுவதற்கான அதிகாரத்தை இரத்து செய்யப்போவதாக டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில், எதிர்வரும் 6-ம் திகதி இடைத்தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கும் போதே டொனால்ட் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த குடியுரிமையை நீக்குவதற்காக சிறப்பு சட்டமூலம் ஒன்றை உருவாக்க உள்ளதாகவும் வெள்ளை மாளிகையின் சட்டத்தரணிகள் இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் டொனால்டு டிரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கர் அல்லாதவர்கள் அல்லது சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுகின்ற நிலை உலகிலேயே அமெரிக்காவில் மட்டுமே உள்ளதாக தெரிவித்த டொனால்டு டிரம்ப் இதற்கு விரைவில் முடிவு எட்டப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !