அமெரிக்கர்கள் மெர்க்கல் மீதே அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர்: கருத்துக் கணிப்பு

பெரும்பாலான அமெரிக்கர்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை காட்டிலும், ஜேர்மனிய அதிபர் அங்கேலா மெர்க்கல் மீதே அதிக நம்பிக்கை கொண்டுள்ளதாக புதிய கருத்துக் கணிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (புதன்கிழமை) வெளியான கருத்துக் கணிப்பின் பிரகாரம் 56 வீதமான அமெரிக்கர்கள் ஜேர்மன் அதிபருக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதி ஜேர்மன் அதிபரை சந்திக்கவுள்ள நிலையிலேயே இந்த கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வின்படி ஜி-20 நாடுகளின் பெரும்பான்மையான மக்களும் ட்ரம்பை காட்டிலும், மெர்க்கல் மீதே அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான அமெரிக்கர்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை காட்டிலும், ஜேர்மனிய அதிபர் அங்கேலா மெர்க்கல் மீதே அதிக நம்பிக்கை கொண்டுள்ளதாக புதிய கருத்துக் கணிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) வெளியான கருத்துக் கணிப்பின் பிரகாரம் 56 வீதமான அமெரிக்கர்கள் ஜேர்மன் அதிபருக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜேர்மனியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதி ஜேர்மன் அதிபரை சந்திக்கவுள்ள நிலையிலேயே இந்த கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆய்வின்படி ஜி-20 நாடுகளின் பெரும்பான்மையான மக்களும் ட்ரம்பை காட்டிலும், மெர்க்கல் மீதே அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !