அமரர் நா.தனபாலன் ஞாபகார்த்தமாக கடந்த 04.10.2014 அன்று ஆத்மசாந்தி பூசை வழிபாடு (படங்கள் இணைப்பு)
செட்டிக்குளம் மீள் குடியேற்ற கிராமமான வடகாடு கிராமத்தின் பிள்ளையார் கோவிலில் அமரர் நா.தனபாலன் ஞாபகார்த்தமாக கடந்த 04.10.2014 அன்று ஆத்மசாந்தி பூசை வழிபாடு இடம்பெற்றதோடு, கிராம மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதற்கான நிதியுதவியை அமரர் நா.தனபாலன் அவர்களின் குடும்பத்தினர், சுவிஸ் ஸ்ரீகதிரவேலாயுத சுவாமி ஆலய நிர்வாகத்தினரின் ஊடாக பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் சமுகப்பணிக்கு பொறுப்பான திரவியநாதன் ஐயாவின் ஒழுங்கமைப்பில் வழங்கியிருந்தனர்.
கிராம மக்களும், வடகாடு பிள்ளையார் கோவில் நிர்வாகத்தினரும் தனபாலன் அவர்களின் குடும்பத்தினருக்கும், ரி.ஆர்.ரி வானொலிக்கும், ஸ்ரீகதிரவேலாயுத சுவாமி ஆலய நிர்வாகத்தினருக்கும் தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
பகிரவும்...