அன்றாட செயற்பாடுகளை வழமையான முறையில் முன்னெடுக்குமாறு கோரிக்கை
எதிர்வரும் 21ம் திகதியின் பின்னர் மீண்டும் பாடசாலைகளுக்கும் அலுவலகங்களுக்கும் சென்று இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய சூழல் நாட்டில் ஏற்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனால் அனைத்து மக்களுக்கும் வலுவான முறையில் இந்த வேலைத்திட்டத்துடன் இணைந்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.
நாட்டில் அமைதியான சூழல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் வெசாக் கால பகுதியில் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். 20ம் திகதி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எதிர்வரும் 21ம் திகதியின் பின்னர் மீண்டும் பாடசாலைகளுக்கும் அலுவலகங்களுக்கும் சென்று அன்றாட செயற்பாடுகளை வழமையான முறையில் முன்னெடுக்குமாறும் இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதில் பெற்றோருக்கு கூடுதலான பொறுப்புக்கள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
பகிரவும்...