அன்பு கவிதைகள்
மண்ணில்
பூத்த பூக்கள்
தான் உதிரும்
நம் மனதில்
பூத் த நட்புக்கள்
என்றும் உதிர்வதில்லை…
மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும்
கோபத்தில் உள்ள அன்பையும்
யாரால்
உணர முடிகிறதோ
அவர்களே
நமக்கு கிடைத்த
உன்னதமான உறவு
நமக்காக வாழ்கின்றவர்கள்
நம்மிடம் எதிர்பார்ப்பது
நம் சந்தோஷத்தை மட்டுமே…
வெளிப்படுத்த தெரியாத
அன்பு கூட
பேரன்பு தானே…
பிடிக்காதவரை
நேசிக்க தொடங்கிவிட்டால்
இனி பிரிவுக்கே
இடமில்லை…
அன்புடன் பேசுங்கள்
அது உங்களை
அழகாக்கும்…
கிடைக்கும் என்பதில்
பிரச்சனை இல்லை
ஆனால் நிலைக்குமா
என்பதில்
தான் பிரச்சனை
(அன்பு)
நமக்கு பிடித்தவர்களிடம் கெஞ்சவும்?
நம்மை பிடித்தவர்களிடம் கொஞ்சவும்?
அதீத அன்பு மட்டுமே காரணம்?
அந்த தருணங்கள் பேரழகு?
அருகில் இருப்பதால்
அன்பு அதிகரிப்பதும் இல்லை
தொலைவில் இருப்பதால்
அன்பு குறைவதுமில்லை
சிலரை விட்டு
விலக முடிவதில்லை
காரணம் உலகமாய் நினைத்து
வாழ்ந்து விட்டதாலும்
உயிர் கூட உடலை விட்டு
பிரிய மறுப்பதில்லை
அன்பு என்பது
ஒரு சிறந்த பரிசு
அதை பெற்றாலும்
கொடுத்தாலும்
சந்தோஷமே…!
நம்
அன்பு ராச்சியத்தை
ஆட்சி செய்ய
கால் பதிக்கின்றாள்
குட்டி தேவதை
அன்புக்காக
ஏங்கி தேடாதீர்கள்
அன்புக்காக ஏங்குபவரை
தேடுங்கள்…!
நிலையான அன்புக்கு
பிரிவில்லை ?
சொல்லாத சொல்லுக்கு
அர்த்தமில்லை
தேடும் பாசத்திற்கு
தோல்வி இல்லை ?
உண்மையான
என் அன்புக்கு
மரணம் இல்லை ???
அக்கறையுடன் கேட்பதற்கு
பதில் சொல்வதே
அன்பின் வெளிப்பாடு…!
பிறர் அழகில்
மயங்காதே
அழகு கிடைப்பது
சந்தோசம் அல்ல
அன்புள்ளம் கிடைப்பதுதான்
உண் மையான சந்தோசம்
நம்மிடம்
ஒன்றுமே இல்லாவிட்டாலும்
தர்மம் செய்ய
ஒன்றே ஒன்று
அளவற்றதாக உள்ளது
அது அன்பு
அன்புக்கு நிகரானது
எதுவும் இல்லை
பாசத்துக்கு கட்டுப்படாத
மனிதர்கள் யாரும் இல்லை
உண்மையான அன்புக்கும் பாசத்திக்கும்
என்றுமே பிரிவு
என்பது கிடையாது
அன்பு
எனும் விதை
தரமாக இருந்தால்
நட்பு
எனும் கனிகள்
சுவையாக கிடைக்கும்
உண்மையான அன்புக்கு
முகங்கள் தேவையில்லை
முகவரியும் தேவையில்லை
நம்மை நினைக்கும்
உண்மையான நினைவுகள்
மட்டுமே போதும்
காலங்கள் சிலரை
மறக்க செய்துவிடும்
ஆனால்
ஒரு சிலரின்
அன்பு காலத்தையே
மறக்க செய்துவிடும்
உண்மையான
அன்புகள்
நம்மை சுற்றி
இருக்கும் போது
நாம் யாரும்
தனி நபர் இல்லை
அன்பு மட்டும் தான்
உலகில் நிரந்தரமானது
அதை உண்மையாக்குவதும்
பொய்யாக்குவதும்
நாம் நேசிப்பவரிடம்
மட்டுமே உள்ளது
அன்பை மட்டும்
பகிர்ந்து கொண்டே இரு
ஏனொன்றால் அன்பின்
ஊற்று மட்டுமே என்றுமே
வற்றாத ஜீவநதி
அடங்கிப்போவதும்
அடிபணிவதும்
உன் அன்பிற்க்கு
மட்டுமே