அனைவரும் ஒற்றுமையாக வாழும் அரசியல் தீர்வை பெற வேண்டும் -மஹிந்த

அனைவரும் ஒற்றுமையாக வாழும் அரசியல் தீர்வை நாட்டு மக்கள் பெற்றிட வேண்டுமென எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள  மக்கள் அனைவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பொங்கல்  பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

தைப்பொங்களை முன்னிட்டு எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வெளிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘தைத்திருநாள் உழவர் பெருநாள் மட்டுமல்ல, நன்றியறிதல் எனும் உயரிய மனப்பாங்கை வெளிப்படுத்துவதுமாகும் இது தமிழ் மக்கள் உலகிற்கு எடுத்துரைக்கும் நலன்மிகு முன்னுதாரணமாகும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஆன்றோர் வாக்கு அதற்கமைய எதிர்காலத்தில் தமிழ் மக்கள் இன்னல்கள் நீங்கி நலங்களும் வளங்களும் பெற்று வாழ வேண்டும்.

அத்தோடு நாட்டில் நிலவுகின்ற இயற்கை சீற்றத்திலிருந்து மீண்டு அனைவரும் மீள எழு எழுச்சி பெறுவோம். அதற்காக அனைவரும் ஒன்றிணைவோம்.

எனது நீண்ட அரசியல் வரலாற்றில் நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி என எல்லா பதிவிகளையும் வகித்த ஒருவன் என்பதோடு இலங்கை பிரஜை என்ற ரீதியில் எனது நடவடிக்கைகள் இன மத பாகுபாடுகள் அற்ற வகையிலும், எமது அன்னைத் திருநாட்டின் பொதுநலன்கள் சார்ந்தனவாகவே இருக்கின்றன.

அதேப் போன்று இன்று நாட்டின் எதிர்கட்சி தலைவர் என்ற வகையிலும் அனைவரும் ஒற்றுமையாக வாழும் அரசியல் தீர்வை நாட்டு மக்கள் பெற்றிட வேண்டுமென பிராத்திக்கின்றேன்’ என தெரிவித்தள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !