அனைத்து கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

மக்களைவைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடியுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அ.தி.மு.க, தி.மு.க, மற்றும் பா.ஜ.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பிலும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது போதி அளவில் பருவமழைப் பெய்யாத நிலையில், வரட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த அனுமதி தரவேண்டும் என, அ.தி.மு.க சார்ப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதேநேரம், போலி வாக்களர்களைக் களைய வேண்டும் என தி.மு.க கோரியது.

மேலும், 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்றும், கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !