அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வொன்றை வழங்குவோம் – ரணில்

அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வொன்றை வழங்குவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(செவ்வாய்கிழமை) ஆற்றிய விசேட உரையின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், “ஒக்டோபர் 26 ஆம் திகதி இடம்பெற்ற அரசமைப்புக்கு முரணான செயற்பாடுகளை தோற்கடிக்க ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகள்.

இதற்காக பிரேரணைகளை சமர்ப்பித்த மற்றும் நிறைவேற்றிய தரப்பினருக்கும் எமது நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். மாவை சேனாதிராஜா, வடக்கின் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். இதனை நாம் தீர்க்க வேண்டும்.

வடக்கின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காண்பதும் எமது அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக இருக்கிறது. புதிய அரசமைப்பையும் கொண்டுவருவோம். இதன் ஊடாக ஒருமித்த நாட்டில் அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழ்வதற்கு வழியமைப்போம்.

இனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வ்வை நாம் வழங்குவோம். புதிய அரசமைப்பின் ஊடாக மாகாணசபைகளையும் சக்திமிக்கதாக மாற்றியமைப்போம்.

அத்தோடு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைமையும் இல்லாதொழிக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. இந்த நிலைப்பாடுகளில் இருந்து நாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்பதை இவ்வேளையில் கூறிக்கொள்கிறேன்“ என தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !