அனில் அம்பானியின் இடைத்தரகராக பிரதமர் மோடி செயற்படுகிறார்- ராகுல்

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அனில் அம்பானியின் நிறுவனம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போர் விமான ஒப்பந்தத்தை பெற வேண்டும் என்பதற்காக, அம்பானியின் இடைத்தரகராக பிரதமர் நரேந்திர மோடி செயற்பட்டுள்ளார் என  இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது  தொடர்ந்து தெரிவித்த அவர், “பிரதமர் மோடி ஒற்றர் போல செயற்பட்டுள்ளார். தேசிய விவகாரங்களைப் பாதுகாப்பேன் என்று உறுதி மொழியெடுத்துள்ள அவரே  பாதுகாப்புத்துறை தொடர்பான விவகாரங்களை சிலரிடம் பகிர்ந்துள்ளதுள்ளார். பாதுகாப்பு அமைச்சக நடவடிக்கைகளையும் பிரதமர் அலுவலகம் உளவு பார்த்துள்ளது. ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி ரகசிய விதிமுறைகளை மீறியுள்ளார்.

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி  இடைத்தரகர் போல் செயற்பட்டுள்ளார். குறித்த ஒப்பந்தம் இறுதியாகுவதற்கு 10  நாட்களுக்கு  முன்பு பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சரை அனில் அம்பானி சந்தித்துள்ளார். அவர் துரோகம் செய்துள்ளார். எனவே அவருக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தொடர வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !