அந்தமானில் மிதமான நிலநடுக்கம்!

அந்தமான் தீவுகளில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

4.8 ரிக்டர் அளவில் இன்று(திங்கட்கிழமை) காலை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியிலுள்ள கட்டிடங்கள் குலுங்கியதாகவும், இதன்காரணமாக மக்கள் அச்சமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, முன்னதாக கடந்த மாதம் அந்தமான் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவிலும், ஜனவரி மாதம் நிகோபார் தீவுகளில் 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் உணரப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !