அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள கூகுள் தேடல்!

உலகின் சிறந்த கழிவறை பேப்பர்’ என்ற கூகுள் தேடலின் போது பாகிஸ்தான் தேசிய கொடி தென்படுவது போன்று மாற்றப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சில இந்தியர்களால் மாற்றப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் நாற்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்தநிலையிலேயே ’உலகின் சிறந்த கழிவறை பேப்பர்’ என்ற கூகுள் தேடலின் போது பாகிஸ்தான் கொடிகள் தென்படுவது போன்று மாற்றப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், இது எப்படி இடம்பெற்றது என்பது குறித்து கூகுள் இதுவரையில் கருத்து தெரிவிக்கவில்லை. கூகுள் தேடலில் இவ்வாறான ஒளிப்படங்கள் வருவது இது முதல்முறையல்ல.

இதற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி குறித்த தேடல்களில் சில அவமரியாதையான சொற்கள் காணப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !