அதிமுக, பா.ஜக கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இணையும்- பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

தமிழகத்தில் அ.தி.மு.க.- பாரதீய ஜனதா இடையே ஏற்பட்ட கூட்டணி, மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரு கட்சியினரும் ஏற்றுக் கொண்டு மகிழ்வுடன் உள்ளனர்.

அ.தி.மு.க., பாரதீய ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. சேரும் என்று நம்புகிறேன். நாட்டின் நலன் கருதி விஜயகாந்த் நல்ல முடிவு எடுப்பார்.

அ.தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 இடங்களும், பாரதீய ஜனதாவுக்கு 5 இடங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதனை நான் கூட்டணியாகவே பார்க்கிறேன்.

தமிழகத்தில் பாரதீய ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகள் எவை? என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்து விடும். இது பற்றி கட்சியின் தலைமை பேசி முடிவெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குமரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வருகிற 1-ந்தேதி வர இருக்கிறார். அப்போது பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும் நாகர்கோவில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டத்தில் கட்டப்பட்ட மேம்பாலங்களை திறந்து வைக்கவுள்ளார்.

இதையடுத்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று பார்வதிபுரம் மேம்பாலத்தை நேரில் பார்த்து ஆய்வு செய்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !