அதிபர் டொனால்டு டிரம்ப் வாழும் அமெரிக்க வெள்ளை மாளிகையில் எலி-கரப்பான் பூச்சி தொல்லை

அமெரிக்க அதிபரின் அதிகார பூர்வ இல்லமாக வெள்ளை மாளிகை திகழ்கிறது. இங்கு தான் அமெரிக்க அதிபர்கள் தங்கியிருந்தனர். தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தனது குடும்பத்துடன் தங்கி இருக்கிறார்.
எனவே இங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எப்போதும் வெள்ளை மாளிகை தீவிர கண்காணிப்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய வெள்ளை மாளிகையில் சமீப காலமாக எலி, கரப்பான் பூச்சிகள், மூட்டைப்பூச்சிகள் மற்றும் எறும்பு உள்ளிட்டவைகளின் தொல்லை அதிகம் உள்ளது.
இதனால் அங்கு வாழும் அதிபர் டொனால்டு டிரம்பும், அவரது குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகளும் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
மொத்தத்தில் வெள்ளை மாளிகை ‘தொல்லை மாளிகை’ ஆக மாறி விட்டது என இணையதளம் முழுவதும் வைரலாக புகார் பரவி வருகிறது. இதை வைத்து சிலர் அதிபர் டிரம்பை கலாய்து வருகின்றனர்.
வெள்ளை மாளிகையில் குப்பை இருக்கும் போல் தெரிகிறது. அதனால் தான் நிறைய பூச்சிகள் வருகிறது என குறிப்பிட்டு உள்ளனர். சிலர் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
டிரம்பும், அவரது குடும்பத்தினரும் நிறைய துரித உணவுகள் சாப்பிட்டு மாளிகையை குப்பையாக வைத்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
வெள்ளை மாளிகையில் இருக்கும் எலி, எறும்பு, மூட்டை பூச்சிகள் அனைத்திடமும் நாட்டு மக்கள் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். நீங்கள் அதிகம் கஷ்டப்படுவீர்கள் என டிரம்பை கேலி, கிண்டல் செய்துள்ளனர்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !