அட்லாண்டிக் பெருங்கடலில் அகதிகள் படகு விபத்து – 58 பேர் உயிரிழப்பு!
மேற்கு ஆபிரிக்க நாடான மொரிட்டானியாவிலிருந்து சென்ற படகு அட்லாண்டிக் பெருங்கடலில் விபத்துக்குள்ளானதில் 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த படகில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் ஏற்றிச் செல்லப்பட்ட நிலையில் 83 பேர் நீந்தி கரை சேர்ந்துள்ளதாக ஐ.நா.வின் இடம்பெயர்வு நிறுவனம் நேற்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவிற்கு ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோர் மத்தியில் இந்த ஆண்டு ஏற்பட்ட மிக மோசமான பேரழிவுகளில் இதுவும் ஒன்றாகும்.
மௌரித்தேனியாவை நெருங்கும் போது படகில் எரிபொருள் தீர்ந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விபத்தில் உயிர் தப்பியவர்கள் மௌரித்தேனியாவின் வடக்கு நகரமான Nouadhibou இல் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான படகு, பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் கடந்த நவம்பர் 27 அன்று காம்பியாவிலிருந்து புறப்பட்டதாக தப்பியவர்கள் தெரிவித்தனர்.