அடித்து கொல்லப்பட்ட ஆதிவாசி மதுவின் தங்கைக்கு காவல்துறையில் வேலை

கேரளாவில் அடித்து கொல்லப்பட்ட ஆதிவாசி வாலிபர் மதுவின் தங்கைக்கு காவல்துறையில் வேலை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆதிவாசி வாலிபர் உணவு திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டு ஒரு கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டார். எனினும் அவர்மிதான குற்றச்சாட்டு போலியானது என தொயவந்ததனை அடுத்து கேரளாவில் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்தநிலையில் ஆதிவாசி வாலிபர் மதுவின் தங்கை சந்திரிகா கேரளாவில் காவல்துறை எழுத்து தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார்.

இந்த நிலையில் காவல்துறை எழுத்து தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளநிலையில் சந்திரிகா வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவருக்கு முதல்நிலை பெண் காவலர் பணி கிடைக்க உள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !