அடிக்கடி செல்பி எடுத்தால் அழகுக்கு ஆபத்து..!

அடிக்கடி செல்பி எடுப்பதால் முகத்தில் சுருக்கம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது.

காலை எழுந்தது முதல் இரவு கண்ணை மூடும் வரை ஒரு செல்பியாவது செல்பி எடுத்து அதை சமூக வளைதளங்களில் பதிவிடவில்லை என்றால் பலருக்கு பைத்தியமே பிடித்துவிடும்.ஆனால் அடிக்கடி செல்பி எடுப்பதால் ஸ்மார்ட் போன்களில் இருந்து வெளிவரும் அதிகமான ஒளி மற்றும் கதிர்வீச்சினால் முகத்தில் விரைவில் சுருக்கம் விழுவது மட்டுமின்றி தோல் தொடர்பான நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது.

செல்போன்களில் இருந்து வெளியேறும் மின்காந்த கதிர் வீச்சு தோலில் உள்ள செல்களை அழிப்பதால் விரைவில் வயதானவர் போல் தோற்றமளிக்கும் நிலை ஏற்படலாம் எனவும்,ஒருவர் எந்த கையில் செல்போனை வைத்து செல்பி எடுக்கிறார் என்பதை அவரின் முகத்திலுள்ள சுருக்கங்களை வைத்தே கண்டுபிடித்துவிடலாம் என இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.ஏனெனில் இடது கையில் செல்போனை பிடித்து செல்பி எடுப்பவரின் இடது பக்க முகம் மின்காந்த கதிர்களால் அதிகம் பாதிக்கப்படும் என்பதால் எளிதில் கண்டுபிடித்து விடலாமாம்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !